திருச்சி கிழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வைகோ?

Published On:

| By Mathi

Vaiko vs. M.K. Stalin in Trichy East By-Election?

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவரான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தவெக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று ஜூன் 27-ந் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் வைகோ அளித்த பதில்களும்:

கேள்வி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதா?

ADVERTISEMENT

வைகோ: வாய்ப்பே இல்லை..

கேள்வி: திமுக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் நீங்கள் அவரை எதிர்த்து போட்டியிட வாய்ப்பிருக்கிறதா?

ADVERTISEMENT

வைகோ: ஹஹா.. இதெல்லாங்க.. கற்பனையான….. யூகங்கள்.. கனவிலும் கூட நினைக்காத யூகங்கள்.. ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது. வைகோவாவது அங்கே போய் நிற்கிறதாவது.. அதுவும் அவரை எதிர்த்து.. அது மாதிரி எல்லாம் நான் தவறு செய்யமாட்டேன். இவ்வாறு வைகோ கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share