தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு மாணிக்கம் தாகூர் எம்.பி, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.” என்று கூறியுள்ளார்.
