தவெக எம்.எல்.ஏ. விவகாரம்: உதயநிதி பேட்டிக்கு எதிராக முறையீடு- ஆட்சேபத்துக்குரிய வீடியோக்களை நீக்கலாம்- உயர்நீதிமன்றம்

By Mathi

|

Published on 25 Nov 2026, 5:12 PM

Kallakurichi TVK MLA- Udhayanidhi Press Meet

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று (நவம்பர் 25) மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜராகி முறையிட்டார்.

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீதான பாலியல் தொல்லை புகார் விவகாரத்தில் ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக உண்மைக்கு முரண்பாடான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக ஆர்.ஜான் சத்யன் முறையிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதி வி.லட்சுமிநாராயணன், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் நீக்குமாறு ஏற்கெனவே சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவற்றை நீக்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel