மானாமதுரை தவெக எம்எல்ஏ மனு தள்ளுபடி

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Nov 2026, 3:54 PM

மானாமதுரை தவெக எம்.எல்.ஏ இளங்கோவன், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2026 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் 69,971 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழரசி 68,763 வாக்குகள் பெற்றுத் தோல்வியைத் தழுவினார்.

ADVERTISEMENT

1,208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் தமிழரசி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், மானாமதுரை தவெக எம்.எல்.ஏ இளங்கோவன் தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

திமுகவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரவீந்திரன், தாமேதரன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்துவிட்டார். தவெக எம்.எல்.ஏ இளங்கோவனின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், தமிழரசி தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் பதிலளிக்குமாறு எம்.எல்.ஏ இளங்கோவனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 18-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel