இன்னும் ஏன் ‘ஆபாச மெசேஜ்’ தவெக எம்.எல்.ஏ.வை கைது செய்யவில்லை? கனிமொழி கேள்வி

By Mathi

|

Published on 25 Nov 2026, 11:36 AM

Kanimozhi Questions Delay in TVK MLA Arul Vignesh’s Arrest

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் அவரை இன்னும் கைது செய்யாதது ஏன் என தவெக அரசுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!

ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.

தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய விஜய் அரசு. இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel