சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு சவரன் ரூ. 2,360 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய தேவை, போர் பதற்றம் என பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் 6 தேதி முதல் தொடர்ச்சியாக தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் சவரனுக்கு ரூ.15,000 வரை குறைந்தது. இதையடுத்து நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்களாக தங்கம் விலை லேசாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் ரூ.2360 வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.295 குறைந்து ரூ.11,420 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.91,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.240 குறைந்து ரூ.9,345க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14 கேரட் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.7,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.10 வரை குறைந்து ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 10,000 வரை சரிந்து ரூ.1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 24-11-2026 | 93,720 |
| 23-11 -2026 | 92,800 |
| 22-11 -2026 | 91,720 |
| 21-11 -2026 | 91,720 |
| 20-11 -2026 | 92,080 |
| 19-11 -2026 | 95,840 |
| 18-11 -2026 | 97,720 |
| 17-11 -2026 | 99,760 |
| 16-11-2026 | 1,00,320 |
| 15-11-2026 | 1,00,920 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 24-11-2026 | 175 |
| 23-11-2026 | 175 |
| 22-11-2026 | 175 |
| 21-11 -2026 | 175 |
| 20-11 -2026 | 175 |
| 19-11 -2026 | 180 |
| 18-11 -2026 | 185 |
| 17-11 -2026 | 190 |
| 16-11 -2026 | 190 |
| 15-11 -2026 | 195 |









