வைஃபை ஆன் செய்ததும், “ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை… அதிகாரம் துணைக்கு வந்தாலும், அநியாயம் நிலைப்பதில்லை!”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. சினிமா பாட்டு எழுத ஆரம்பிச்சுட்டீங்களா?
நடக்கிறதை எல்லாத்தையும் பார்க்கும் போது இதைவிட கொடூரமாகத்தான் பாடனும்னு தோணுது.. இங்கதான் சோசியல் மீடியாவில நியூஸ் ஷேர் பண்றதுக்கே ”ஏழரை” பஞ்சாயத்தா கெடுபிடி இருக்கே.. இருந்தாலும் நாம சொல்ல வேண்டியதை சொல்லிடுவோம் சரிங்களா ப்ரோ..
ஓகே ப்ரோ.. கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ.வோட ‘சேட்டை’ வெட்ட வெளிச்சமாகிடுச்சே..
ஆமாங்க ப்ரோ.. பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் என்ன மாதிரி மெசேஜ் அனுப்பினார்.. இதை பத்தி ஏற்கனவே அமைச்சர்கள் வன்னி அரசு, புஸ்ஸி ஆனந்துகிட்ட புகார் கொடுத்தும் ஒன்னும் நடக்கலைன்னு நாம பேசியிருந்தோம்..
இப்ப உயர்நீதிமன்றத்துல கேஸ் போட்டதும் ஆட்சியர் புகார் கொடுத்தது உண்மைன்னு உறுதியாகிடுச்சு.. அதோட தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 செக்ஷன்ஸ்ல கேஸ் போட்டிருக்காங்க.. அருள் விக்னேஷை எந்த நேரத்திலும் போலீஸ் ‘தூக்கிடும்’னு சொல்றாங்க.. அதுக்கு முன்னாடி அவரு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாருன்னும் சொல்றாங்க.. அதனால கள்ளக்குறிச்சியோட சேர்த்து 7 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குற நிலைமைதான்..
சரிங்க ப்ரோ.. இந்த கேஸில வெளியே வராத தகவல்களை சொல்லுங்க..
ஆமாங்க ப்ரோ.. ஏகப்பட்ட விஷயம் நடந்திருக்குங்க.. இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “தலைமை செயலாளர்கிட்ட ஆட்சியர் புகார் கொடுத்த பிறகு கோட்டையில டிஸ்கஷன் நடந்தது.. மீடியாவில இந்த விஷயம் ரொம்ப பெரிசான நிலைமையில, கலெக்டர்கிட்ட இருந்து எப்படியாவது மறுப்பு வாங்கிடனும்னு பலரும் முயற்சி செஞ்சாங்க.. சிஎம் விஜய்க்கு நெருக்கமான வலது, இடதுகள், சீனியர் அமைச்சர்கள் என பலருமே கலெக்டருக்கு போன் போட்டு எப்படியாவது மறுப்பு கொடுங்க.. எம்.எல்.ஏ.வை சாரி கேட்க சொல்றோம்.. நீங்க புகாரை வாபஸ் வாங்கிட்டு மீடியாவில அப்படி எல்லாம் நடக்கலைன்னு சொல்லனும்னு நெருக்கடி கொடுத்துகிட்டே இருந்தாங்க..
இதனால ஆட்சியரும் அவரது கலெக்டர் கணவரும் ரொம்பவே பரிதவிச்சு போனாங்க.. அப்பதான் சென்ட்ரல் கவர்மெண்ட் உள்ளே வந்தது.. டெல்லியில இருந்து பேசுன அதிகாரிகள், ”நீங்க பயப்படாதீங்க.. உங்களுக்கு என்ன நடந்ததோ அதை சொல்லி புகார் கொடுங்க.. அப்படி எல்லாம் ஸ்டேட் கவர்மெண்ட் ரொம்பவே நெருக்கடி கொடுத்துச்சுன்னா நீங்க மத்திய அரசு போஸ்டிங்குக்கு வந்துடுங்க.. உங்க ரெண்டு பேருக்கும் போஸ்டிங் போட்டுவிடுகிறோம்.. நீங்க தைரியமா இருங்க.. நாங்க பார்த்துக்கிறோம்”ன்னு சொன்னாங்க..
இதுக்கு பிறகுதான், “ஆகட்டும் பார்க்கலாம்”னு எழுத்துப்பூர்வமான புகார் எல்லாம் கொடுத்திருக்காங்க கலெக்டர்.. “ன்னு சொல்றாங்க ப்ரோ..
இப்ப இந்த விவகாரத்துல, “குற்றத்தை மூடி மறைக்கிற முயற்சியில ஈடுபட்டவங்களையும் கண்டுபிடிச்சு தண்டிக்கனும் அப்படிங்கிற குரலும் வலுவாக கேட்குது.. அதாவது கலெக்டர் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாமல் புகாரை வாபஸ் வாங்க சொன்ன அமைச்சர்கள், கோட்டையில திரை மறைவில ஆட்டத்தை ‘கலை’ச்சுவிடுகிறவங்கன்னு எல்லாத்தையும் பிடிங்க சார்.. கலெக்டர் போன் கால்ஸை பார்த்தாலே யார் யார் மிரட்டுனதுன்னு தெரிஞ்சுடும்தானே”ன்னு அப்படிங்கிற கோரிக்கையும் வலுவாக வைக்கப்படுதுங்க ப்ரோன்னு சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.









