சிவகங்கையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

By Pandeeswari Gurusamy

|

Published on 25 Nov 2026, 10:55 AM

சிவகங்கை அருகே பலசரக்குக் கடையில் பொருட்கள் வாங்க வந்தவரை மர்ம கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமத்தில் உள்ள பலசரக்குக் கடைக்குத் தேவனைப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் இன்று காலை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மகேஸ்வரனைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், மகேஸ்வரனின் முகத்தைச் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்துச் சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி அமல அட்வின் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மகேஸ்வரனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த மகேஸ்வரனுக்கும் மர்ம கும்பலுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிவகங்கை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel