பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 படத்திலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘2018 : Everyone is a Hero’ படம் 100 கோடி வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. மேலும் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது விழாவிற்கு 2018 படத்தை அனுப்ப தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் நெதர்லாந்தில் நடந்த “செப்டிமியஸ் விருதுகள்” விழாவில் 2018 படத்தில் நடித்ததற்காக டோவினோ தாமஸிற்கு ஆசியாவின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த விருதை வெல்லும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் டோவினோ தாமஸ்.
இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு இது தான் காரணம்: கே.சி.கருப்பண்ணன்