‘ஜெயிலர் 2’ படத்தை கனடாவில் திரையிடுவதில் இத்தனை சிக்கல்களா? ‘யார்க் சினிமாஸ்’ மனோ கைது?

Published On:

| By Mathi

Canada-Jailer 2- Rajinikanth

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை திரையிட திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் ‘யார்க் சினிமாஸ் மனோ’ (York Cinemas Mano) என்று அறியப்படும் மனோகரன் சுப்பிரமணியம் கொலைச் சதித் திட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக கனடாவின் TorontoStar உள்ளிட்ட ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இந்தியா உட்பட வெளிநாடுகளில் வசூலை வாரி குவித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை கனடாவில் யார்க் சினிமாஸ் (York Cinemas) தமது திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் திடீரென யார்க் சினிமாஸ் வெளியிட்ட அறிக்கையில், படத்தைத் திரையிடுவதற்குத் தேவையான KDM எனப்படும் டிஜிட்டல் கீயை விநியோகஸ்தர்கள் வழங்கவில்லை; அதனால் ஜெயிலர் 2 படத்தை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கனடாவில் யார்க் சினிமாஸ் மனோ என்று அறியப்படும் மனோகரன் சுப்பிரமணியம் (43) கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான Toronto Star அக்டோபர் 21-ந் தேதி செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டொராண்டோ போலீசாரை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், மனோகரன் சுப்பிரமணியம் அக்டோபர் 17-ந் தேதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளமாக எக்ஸ் பக்கத்திலும் மனோ சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டிருப்பதாக சிலர் பதிவிட்டுள்ளனர். இந்த கைது தொடர்பாக யார்க் சினிமாஸ் இதுவரை விளக்கம் தரவில்லை.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share