தேவா குடும்பத்தில் மீண்டும் சோகம் : தம்பி மகன் மறைவு!

Published On:

| By Kavi

இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகன் கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் தேவா திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவில் இருந்து இன்னும் தேவா குடும்பத்தினர் மீளாத நிலையில் கார்த்திக்கின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

கார்த்திக், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ் மகன் ஆவார்.

தமிழ் சினிமாவில் வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். குறிப்பாக கடந்த இரு வாரங்களாக இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

ADVERTISEMENT

இவரது தந்தை சபேஷும் இசையமைப்பாளர். தனது சகோதரர்களான தேவா, முரளி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 2025 அக்டோபர் மாதம் இவர் காலமானார். தொடர்ந்து ஒரே வருடத்தில் அவரது மகனும் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்துவிட்டார்.

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தேவா மறைந்து , அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஈரம் காய்வதற்குள் கார்த்திக் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்திக்கிற்கு ரம்யா என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் வளசரவாக்கம் மயானத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share