72 குண்டுகள்… அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம்!

Published On:

| By Kavi

இசையமைப்பாளர் தேவா உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

கானா முதல் காதல் வரை பல்வேறு பாடல்களுக்கு இசையமைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் இசையமைப்பாளர் தேவா. 

ADVERTISEMENT

திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை காலமானார். 

சென்னையில் உள்ள தேவாவின் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

முதல்வர் விஜய் தொடங்கி அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில் சென்னையில் இருந்து இசையமைப்பாளர் தேவாவின் உடல் ஆற்காடு அருகே உள்ள அவர் சொந்த கிராமமான சக்கரமல்லூருக்கு கொண்டுவரப்பட்டது. 

ADVERTISEMENT

அவரது பண்ணை தோட்டத்தில் ஏற்கனவே இறுதி சடங்கிற்கான பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

தேவாவின் புகைப்படம் பதித்த சந்தன பேழையும் கொண்டுவரப்பட்டன. 

இந்த சூழலில் தமிழக அரசு அறிவித்தபடி தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு ரவுண்டுக்கு 24 குண்டுகள் என மொத்தம் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில், திரைப்பட இயக்குனர் சேரன் பின்னணி பாடகி அனுராதா அமைச்சர் காந்திராஜ் முன்னாள் அமைச்சர் ஆர் காந்தி, கே சி வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பிரியா ,காவல் கண்காணிப்பாளர் சிபின் ஆகியோரும் தேவாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share