இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதை

Published On:

| By Pandeeswari Gurusamy

பிரபல இசையமைப்பாளர் தேவா இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவிற்கு திரை உலகினர் அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை திநகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் ஏராளமான திரை உலக பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசு மரியாதை

இதற்கிடையில் தேவா உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இசையுலகுக்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் விதமாக தேவாவின் இறுதி சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் தேவா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

இறுதிச் சடங்கு

தேவா உடல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share