பிரபல இசையமைப்பாளர் தேவா இன்று (அக்டோபர் 17) திடீர் மாரடைப்பால் காலமானார்.
பிரபல இசையமைப்பாளர் தேவா, இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை 8:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என முதல்கட் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை மயிலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘மனசுக்கேத்த மகராசா’ என்ற படம் மூலம் 1989-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி பதித்தார். நடிகர் பிரசாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்த தேவா, தனது சகோதரர் சந்திரபோஸுடன் இணைந்து இசைக்குழுவை நடத்தி வந்தார்.
தமிழ் சினிமாவில் ‘கானா பாடல்கள்’ என்றாலே தேவா என்னும் அளவிற்குத் தனி முத்திரை பதித்தவர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் கோலோச்சிய காலத்தில், தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தவர்.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர். கடைசியாக ‘சாருகேசி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்குப் பல்வேறு வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார். ரஜினியின் பெயர் அறிமுக BGM உருவாக்கியவர்.
இந்நிலையில் இன்று அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
