இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

வானம்பாடி
76 வயது கிழவனுக்காக 26 வயது இளைஞர்கள் படம் பார்த்தல் அது தமிழ்நாடு…
76 வயது கிழவனை அப்புறப்படுத்த 26 வயது இளைஞர்கள் போராடினால் அது வடநாடு. இவ்வளவு தான் தம்பி அரசியல்…
படித்தது…

balebalu
ஏழை மக்களுக்கு மட்டும் கிடைக்க கூடிய ரேஷன் அரிசி
எப்படி அமைச்சர்களுக்கு கிடைக்கிறது

ArulrajArun
“அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது..”
-வி.கே.சசிகலா, அஇபுதமமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி நவ்; அனைவரும் ஒன்றிணைய எல்லாம் முடியாது மிச்சம் மீதி இருக்குற ஆட்களை எல்லாம் ஆளுக்கு ஒரு கட்சிக்கு அனுப்பி வேணா வைக்கலாம்

அண்ணாச்சி
முதலமைச்சர் விஜய் ஊழலை ஒழித்துள்ளதாக வைகோ பாராட்டியுள்ளார்.
# for example…. 35 ரூபாய்

Joe…
Meanwhile our anna ~ என்ன வெறும் அரிசி விலை, கரண்ட் பில்க்கே இப்பிடி அழுவுறானுங்க.
இன்னும் நம்ம ஆட்சில டிசம்பர் மழை, எல்நினோ புயல், வெள்ளம் வேற பாக்க வேண்டி இருக்கு..

பரமசிவம் ராமசாமி
தீபாவளியா!?
அது எப்ப வருதுனு? கேட்கிறதெல்லாம் யாருனு
நெனச்சே!?
ஒரு காலத்துல , தீபாவளி தேதிய காலண்டர்ல மடிச்சு விட்டுட்டு..
நாளுகளை எண்ணிக்கிட்டு இருந்த நம்ம பசகதான்!!??

படிக்காதவன்
எப்போது வந்தாலும்
நான் விழுகிறேன்
நீ ஏந்திக்கொள் என்று
மண்ணிற்கு கட்டளையிட்டு வருகிறது போலும்
மழை…

ச ப் பா ணி
பத்தாயிரத்துக்கு பட்டாசு,
15 ஆயிரத்துக்கு துணி பர்ச்சேஸ் செய்திட்டு..
தீபாவளிக்கு திருப்பதி போக டிக்கெட் போட்டிருக்கிறதும் ஒரே குடும்பமா

லாக் ஆஃப்
