சென்னையில் நவ.21-ல் அனிருத்- காவ்யா மாறன் திருமண வரவேற்பு – தெலுங்கானா முதல்வருக்கு நேரில் அழைப்பு தந்த கலாநிதி மாறன்!

Published On:

| By Mathi

Anirudh- Kavya Maran Wedding

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நவம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நவம்பர் 9-ந் தேதி அனிருத்–காவ்யா மாறன் திருமணம் நடைபெற உள்ளதாக நமது மின்னம்பலத்தில் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நவம்பர் 21-ந் தேதி அனிருத்–காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்கான அழைப்பிதழை வழங்குவதற்காக கலாநிதி மாறனும், அவரது மனைவி காவேரி மாறனும் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

ADVERTISEMENT

அப்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ரேவந்த் ரெட்டியிடம் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share