ஜெயிலர் 2 திரைப்படம் இன்று (அக்டோபர் 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
2023-இல் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஜெயிலர் 2 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஓய்வுபெற்ற ஜெயிலர் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மீண்டு வந்துள்ளார் ரஜினிகாந்த். எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, ரித்விக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் முதல் காட்சி வெளியாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா, மும்பை என பிற இடங்களில் படம் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில், Standard, IMAX 2D மற்றும் Dolby Cinema வடிவங்களில் உலகளவில் திரையிடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜெயிலர் – 2 படத்தின் முதல் காட்சியை பார்த்த பின்பு, ’தலைவரை யாரும் வெல்ல முடியாது’ என ரசிகர்கள் பேட்டியளித்து வருகின்றனர்.
முதல் பாதியில் மூர்த்தி கதாபாத்திரத்தை வைத்து நெல்சன் செய்துள்ள சம்பவம் நன்றாக இருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
இடைவேளை காட்சி எல்லாம் மாஸ், கொல மாஸ். அனிருத் இசையை பாராட்டியே ஆக வேண்டும் என ரஜினி ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் பாசிட்டிவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
