தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும், பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா, இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இந்நிலையில், மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தியாக ராய நகரில் உள்ள தேவா இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, முதலமைச்சரைப் பார்த்ததும் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுதார். அவரை அன்போடு கட்டி அணைத்து முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
முன்னதாக, தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
