பெரியார் அறிவுலக பதிவேட்டில் முதல்வர் விஜய் எழுதிய வரிகள்?

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் தமிழக முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முதல்வர் விஜய் பெரியார் அறிவுலகம் நூலகத்தை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்த முதல்வர், அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் “16.10.2026 சி. ஜோசப் விஜய்” எனத் தனது பெயரை எழுதியதோடு, “Know More, Fear Less” என ஆங்கிலத்தில் எழுதினார். இதற்கு “அதிகம் அறிந்துகொள்; அச்சம் குறையும்” என்று பொருள்

திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் திறப்பு விழா நடந்ததை தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ADVERTISEMENT

மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை உச்சரித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share