மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி

Published On:

| By Mathi

LK Advani-BJP

பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (வயது 98), நெஞ்சுத் தொற்று பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 16-ந் தேதி) மாலை அனுமதிக்கப்பட்டார்.

வயது மூப்பு காரணமாக உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் அத்வானிக்கு நெஞ்சுத் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ADVERTISEMENT

அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share