சூர்யாவின் ‘சீன்’ பட பிரம்மாண்ட விழா.. அக்.25-ல் துபாயில் கொண்டாட்டம்!

Published On:

| By Mathi

Suriya-Scene

சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக அக்டோபர் 25-ந் தேதி துபையில் பிரம்மாண்ட விழா நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மலையாளத்தில் ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சீன்’. இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ADVERTISEMENT

சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே ‘ஆத்தி இவ யார்ரா’, ‘ஏரோப்ளேன்’ ஆகிய 2 பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ‘சீன்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய பிரம்மாண்ட நிகழ்ச்சி துபையில் உள்ள சிலிக்கான் சென்ட்ரல் மாலில் அக்டோபர் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று ழகரம் ஸ்டூடியோஸ் நேற்று (அக்டோபர் 21-ந் தேதி) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

‘Scene Live in Dubai’ என்ற பெயரில் நடைபெறும் இந்த விழாவில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share