டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

top ten news today in Tamil February 22 2024

top ten news today in Tamil February 22 2024

பால் விற்பனை கூட்டமைப்பு பொன் விழா!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 22) கலந்து கொள்கிறார்.

புதுச்சேரி இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

புதுச்சேரி சட்டமன்றத்தில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

ஜெயலலிதா சிலை திறப்பு விழா!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொள்கிறார்.

திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை ஆலோசனை!

திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

சைத்தான் டிரைலர் ரிலீஸ்!

அஜய் தேவ்கான், மாதவன் நடித்துள்ள சைத்தான் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

பிரக்யான் தொழில்நுட்ப விழா!

மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் பிரக்யான் தொழில்நுட்ப விழா திருச்சி என்.ஐ.டி-யில் இன்று தொடங்குகிறது.

உறியடி விஜயகுமார் படம் அப்டேட்!

உறியடி விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது.

வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்!

திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, எழும்பூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில், இன்று திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 642-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்!

தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மட்டன் கறி ஆனம்

“காமராஜர் ஆட்சி அமைப்போம்“: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சபதம்!

top ten news today in Tamil February 22 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share