திடீர் விருந்தினர்களின் வருகையின்போது அவர்களின் உணவு விருப்பத்தைப் பூர்த்தி செய்வது சிரமமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் செய்யும் உணவு எளிமையாகவும் அனைவரையும் ஈர்க்கும் உணவாக இருக்க இந்த மட்டன் கறி ஆனம் உதவும்.
என்ன தேவை?
மட்டன் – அரை கிலோ
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – ஒன்று
பிரியாணி இலை – ஒன்று
பெரிய வெங்காயம் – 3
நறுக்கிய தக்காளி – 2
நறுக்கிய உருளைக்கிழங்கு -2
கீறிய பச்சை மிளகாய் – 2
இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
தயிர் – கால் கப்
துருவிய தேங்காய் – கால் கப்
முந்திரி – 10
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மட்டன் மசாலாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தேங்காய், முந்திரி ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துவைத்து கொள்ளவும்.
மட்டனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு, சிறிதளவு இஞ்சி – பூண்டு விழுது மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், தக்காளி, வேகவைத்த மட்டன், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மட்டன் மசாலாத்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
கலவையை ஐந்து நிமிடங்கள் வதக்கிய பிறகு, இதனுடன் கால் கப் தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கு வேகும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும் பின்னர் இதனுடன் அரைத்த தேங்காய் – முந்திரி விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இறுதியாக மேலே சிறிதளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து அலங்கரிக்கவும்.
குறிப்பு:
இதே செய்முறையை கோழி இறைச்சியிலும் செய்யலாம். ஆனால் கோழி இறைச்சியை முன்பே குக்கரில் வேகவைக்கத் தேவையில்லை. வதக்கும்போது அப்படியே சேர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…