தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
தொண்டாமுத்தூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

தொண்டாமுத்தூர் தொகுதி.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2011, 2016, 2021-ல் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற தொகுதி.. இந்த முறை இந்த தொகுதியில நிறைய சுவாரசியம் இருக்கு.. எஸ்பி வேலுமணி என்கிற பெயரிலேயே சுயேட்சை போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளரான என்.ஆர்.கார்த்திகேயன் பெயரில் 5 கார்த்திகேயன்கள் களம் காண்பதும் ஏராளமான பரிசு பொருட்கள் வீடு வீடாக குவிக்கப்படுவதும்னு சுவாரசியத்துக்கு பஞ்சமே இல்லாத தொகுதி.
அதிமுக செல்வாக்கான தொகுதியாக இருந்தாலும் செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகம் கவனிக்கப்படுகிறது.
திமுக வேட்பாளரான என்.ஆர். கார்த்திகேயன் புதுமுகம். திமுகவின் மாவட்டப் பிரதிநிதியாக இருக்கிறார். நரசிபுரம் ஊராட்சியின் தலைவராக பணியாற்றி இருக்கிறார்.
2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த ஊராட்சிக்கான உத்தமர் காந்தி விருது பெற்றவர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 36%
அதிமுக – 47%
தவெக- 11%
நாதக- 4% வாக்குகள் பெறும்
அதிமுக வேட்பாளர் எஸ்.பி வேலுமணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
