திருப்பரங்குன்றம் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ. யார்?

By Kavi

|

Published on 14 Apr 2026, 2:03 PM

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

திருப்பரங்குன்றம் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 – நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

திருப்பரங்குன்றம் தொகுதி.. தீபத்தூண் விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட தொகுதி..

அதிமுகவின் சீனியர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா 2021-ல் வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறையும் விவி ராஜன் செல்லப்பாவே களம் காண்கிறார்.

திமுக வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டி போட்டியிடுகிறார்.. 2019 உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். மதுரை தெற்கு மாவட்ட கவுன்சிலரான கிருத்திகா தங்கபாண்டிக்கு சட்டசபை தேர்தல் களம் புதிது

.ராஜன் செல்லப்பாவை பொறுத்தவரைக்கும் 2011-ல் மதுரை மேயராக இருந்தவர்.

2016-ல் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். போன முறை இதே திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு 29,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ராஜன் செல்லப்பா.

இந்த தொகுதியில் தவெக சார்பில் சி.டி.ஆர் நிர்மல் குமார் போட்டியிடுகிறார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 34%
அதிமுக – 38%
தவெக- 18%
நாதக- 8% வாக்குகள் பெறும்

அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மீண்டும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? விருதுநகர் | Virudhunagar | Minnambalam Mega Survey Results 2026

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel