ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு!

Published On:

| By christopher

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விசிக தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கும்படி நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22ஆம் தேதி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது திருமாவளவன் தரப்பில், மத நல்லிணக்கம், சட்டம் – ஒழுங்கு பிரச்னை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிடப்பட்டது.

”அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்னை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு உகந்ததல்ல. அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், “காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது” எனவும் வாதிடப்பட்டது.

இதனைதொடர்ந்து எதிர்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனிடையே நேற்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு காவல் துறை தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆர்எஸ்எஸூம் – சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா?: திருமாவளவன் கேள்வி!

அக்டோபரில் தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share