அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு பல்வேறு மாவட்ட போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்தியச் சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டனர்.
இதற்காக ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து டிஜிபியிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் அளிக்காத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் நிபந்தனையோடு அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
ஒன்பது மாநகர காவல் ஆணையர் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகள், 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்,
அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்த இருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னை ,ஆவடி தாம்பரம், மேற்கு மண்டலத்தில் சேலம், திருப்பூர் கோவை, மத்திய மண்டலத்தில் திருச்சி, தென் மண்டலத்தில் மதுரை, நெல்லை ஆகிய மாநகர காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
கிச்சன் கீர்த்தனா : கம்பு – பச்சைப்பயறு – வெல்ல மசியல்