’அவதூறுகள் அசைத்திடாது’.. ஆ.ராசாவுக்கு விசிக எச்சரிக்கை!

Published On:

| By Mathi

VCK DMK A Raja

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணையும் விசிகவின் முடிவை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆ.ராசாவுக்கு விசிக (VCK) மாநில பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி பதிலளித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம்
ஆற்றாமையால் அள்ளிவீசும்
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா
அனலில் தகித்து போவீர்!

ADVERTISEMENT

விசிக துணைப் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது” என ஆ.ராசா பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share