முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் இணையப் போவதாக அறிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. (DMK A Raja)
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணையப் போவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான திண்டிவனம் எம்.எல்.ஏ. வன்னி அரசு, அமைச்சரவையில் இடம் பெற உள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் முதல்வர் விஜய் அமைச்சரவையில் இணைகிறது. அக்கட்சியின் பாபநாசம் எம்.எல்.ஏ. ஷாஜஹான், அமைச்சரவையில் இடம் பெறுகிறார்.
திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் முதல்வர் விஜய் அமைச்சரவையில் இணைவதை திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்து இன்று மே 21-ந் தேதி இரவு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆ.ராசாவின் எக்ஸ் பதிவு:
முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி —
புணர்ச்சிக்கு வேறிடம்
தேடுவதில் தவறில்லை!
பெரியாரின்
‘காலதேச வர்த்தமான’ த்திற்கு
காத்திருப்போம் ; என்றாலும்
களமாடுவோம் !
வெற்றி நமக்கே!!
