முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான அமைச்சரவையில் விசிகவின் வன்னி அரசு, முஸ்லிம் லீக் ஷாஜஹான் ஆகியோர் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த மே 10-ந் தேதி பதவியேற்றனர். இதனைத் தொடர்ந்து இன்று மே 21-ந் தேதி 2-வது கட்டமாக 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதனும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
வன்னி அரசு , ஷாஜஹான்
இந்நிலையில் விஜய் அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெறுவதாக அறிவித்துள்ளன. விசிகவின் வன்னி அரசு, முஸ்லிம் லீக்கின் ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் வன்னி அரசு மற்றும் ஷாஜஹானுக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
