தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. அதெப்படி விஜய் அரசை குறை சொல்ல முடியும்? ‘வரிந்து கட்டிய’ சிபிஐ வீரபாண்டியன்!

Published On:

| By Mathi

CPI Veerapandian

தமிழ்த் தாய் வாழ்த்து (Tamil Thai Vazhthu) சர்ச்சையில் முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தவெக அரசை குறை சொல்ல முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாலர் மு.வீரபாண்டியன் (CPI Veerapandiyan) தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

கேள்வி: தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பற்றி..

பதில்: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவினுடைய பண்கள், தேசிய கீதம், இந்தியாவினுடைய தேசிய கீதங்கள் எல்லாவற்றையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆளுநரை நாங்கள் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.\

ADVERTISEMENT

கேள்வி: இந்த விவகாரத்துல தவெக அரசுக்கு எந்தவித ரெஸ்பான்சிபிலிட்டியும் இல்லையா?

பதில்: இல்லை, சட்டமன்றத்தில் தமிழக அரசு, முதல்வர் சரியாக இருக்கிறார். ? தமிழக சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்துவிட்டார்கள். ஆனால் ஆளுநர் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். எந்த இந்திய தேசிய பாடல்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்திய தேசிய கீதத்தை யாவற்றையும் விட நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அதேபோன்று இன்னும் நான்கு ஐந்து நாட்டுப் பாடல்கள் இருந்தாலும் அதை மதிக்கிறோம். ஆனால் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதுகுறித்து ஆளுநர் சிந்திக்க வேண்டும் என்று நாங்கள் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மு.வீரபாண்டியன் கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share