சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் பிரிவுக்கான (Criminal Side) தமிழ்நாடு அரசின் புதிய வழக்கறிஞர்களாக (New Govt. Advocates) 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்ட உத்தரவில்,
தமிழ்நாடு அரசின் குற்றவியல் பிரிவு வழக்கறிஞர்களாக
1) ஆர். கணேஷ் குமார்
2) அமர்நாத்
3) எஸ். யோகராஜா சேகர்
4) சி.ஆர். மலர்வண்ணன்
5) ஆர். ராஜசேகரன்
ஆகியோர் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் பரிந்துரையின் அடிப்படையில் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களாக பி. வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
