காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்த 8 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்த முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

Congress TVK Ministers

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடித்த 8 பேருக்கு முதல்வர் விஜய் (CM Vijay) அமைச்சர் பதவி வழங்கி உள்ளார். இதே முதல்வர் விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் 2 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் விஜய் பாலாஜி, குமார், ராஜீவ், ராஜ்குமார், டிகே பிரபு, முகம்மது பர்வேஸ், கீர்த்தனா, தென்னரசு ஆகியோர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள்.

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் விஜய் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனை 23,966 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமைச்சர் ஆர்.குமார் வென்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹசன் மவுலானா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது.

ADVERTISEMENT

அமைச்சர் ராஜீவ் தாம் போட்டியிட்ட திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்எம் கருமாணிக்கத்தை 2,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமைச்சர் ராஜ்குமார் தாம் போட்டியிட்ட கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சந்திரசேகரனை 15, 519 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ADVERTISEMENT

அமைச்சர் டிகே பிரபு, காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாங்குடியை 46,074 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமைச்சர் முகம்மது பர்வேஸ் தாம் போட்டியிட்ட அறந்தாங்கி தொகுதியில்
காங்கிரஸ் கட்சியின் டி.ராமச்சந்திரனை 10,062 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமைச்சர் கீர்த்தனா, சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஜி.அசோகனை 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகையை 54,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் அமைச்சர் தென்னரசு.

சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. அத்துடன் முதல்வர் விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share