சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் தொடக்கத்தில் முதலில் ‘வந்தே மாதரம்’ பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வைத்தார்.
பதவியேற்ற அமைச்சர்கள்:
- தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தவெக எம்எல்ஏ ஸ்ரீநாத்
- அவிநாசி சட்டமன்றத் தொகுதி தவெக எம்எல்ஏ கமலி
- குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஜயலட்சுமி
- காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ரஞ்சித் குமார்
- கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வினோத் குமார்
- திருவாடானை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜீவ்
- கடலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார்
- அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ காந்தி ராஜ்
- ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மதன் ராஜா
- ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஜெகதீஸ்வரி
- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் (காங்கிரஸ்)
- ஈரோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஜய் பாலாஜி
- ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன்
- சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தமிழன் பார்த்திபன்
- ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ரமேஷ்
- மேலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விஸ்வநாதன், (காங்கிரஸ்)
- வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ குமார்
- ஸ்ரீபெரும்புதூர்சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தென்னரசு
- கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார்
- அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ முகமது ஃபர்வாஸ்
- தாம்பரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ சரத்குமார்
- ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மரிய வில்சன்
- கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ விக்னேஷ்
