அக்டோபரில் தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகள்!

விளையாட்டு

அக்டோபர் மாதம் கிரிக்கெட், கால்பந்து, கபடி ஆகிய சர்வதேச போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளதால் விளையாட்டு ரசிகர்கள் எந்த போட்டியினை பார்ப்பது என்று குழப்பம் அடைந்துள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் சர்வதேச போட்டிகள் தொடங்கி நடைபெறவுள்ளன. அதில், டி20 ஆடவர் உலகக் கோப்பை, மகளிர் ஆசிய கோப்பை, ப்ரோ கபடி, ஐஎஸ்எல் கால்பந்து, யு17 மகளிர் கால்பந்து ஆகிய போட்டிகள் அக்டோபர் மாதத்தில் நடைபெறுகின்றன.

டி20 ஆடவர் உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த நாட்களில் காலை 9.30 மணிக்கு ஒரு போட்டியும், பிற்பகல் 1.30 மணிக்கு ஒரு போட்டியும் நடைபெறவுள்ளன.

continues sports events in October months sports fans confused

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி உட்பட மொத்தம் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் ஆசியக் கோப்பை

இந்த ஆண்டு மகளிர் ஆசியக் கோப்பை அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

continues sports events in October months sports fans confused

காலை 8.30 மணிக்கு ஒரு போட்டியும், பிற்பகல் 1 மணிக்கு ஒரு போட்டியும் தொடங்கி நடைபெறவுள்ளன.

ஐஎஸ்எல் கால்பந்து

ஐபிஎல் போட்டி போல் நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

continues sports events in October months sports fans confused

இந்த போட்டிகள் மாலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

ப்ரோ கபடி

இந்திய கபடி தொடரான ப்ரோ கபடி போட்டிகள் அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

ப்ரோ கபடி தொடரில் நாள் ஒன்றுக்கு மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 7.30 மணிக்கு முதல் போட்டியும், 8.30 மணிக்கு இரண்டாவது போட்டியும், 9.30 மணிக்கு மூன்றாவது போட்டியும் தொடங்கவுள்ளன.

ஃபிஃபா யு17 மகளிர் கால்பந்து

17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் கால்பந்து போட்டிகள் அக்டோபர் 11 ஆம் தேதி தொட்ங்கி அக்டோபர் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

continues sports events in October months sports fans confused

இந்த தொடரில் நாள் ஒன்றுக்கு இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 4.30 மணிக்கு ஒரு போட்டியும், இரவு 8.30 மணிக்கு இரண்டாவது போட்டியும் தொடங்கி நடைபெறவுள்ளன.

குழப்பமும் கொண்டாட்டமும்

அக்டோபர் மாதம் மட்டுமே டி20 உலகக் கோப்பை, மகளிர் ஆசியக் கோப்பை, யு17 ஃபிஃபா மகளிர் கால்பந்து, ப்ரோ கபடி, ஐஎஸ்எல் கால்பந்து ஆகிய ஐந்து விளையாட்டு போட்டி தொடர்கள் தொடங்கி நடைபெறவுள்ளன.

இதனால் விளையாட்டு ரசிகர்கள் போட்டிகளை காண்பதற்காக ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறுவதால் எந்த போட்டியை பார்ப்பது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஐஎஸ்எல் கால்பந்து மற்றும் ப்ரோ கபடி ஆகிய இரண்டு போட்டியும் மாலை 7.30 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்குகின்றன.

மோனிஷா

டி20 உலகக்கோப்பை: பும்ராவிற்கு பதில் யார்?

ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் பார்த்த த்ரிஷா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *