“அமைச்சராக பதவியேற்க மாட்டாரா விசிக வன்னி அரசு?” – பாஜக கிளப்பிய ‘வந்தே மாதரம்’ சர்ச்சை!

Published On:

| By Mathi

BJP VCK Vande Mataram

வந்தே மாதரம் பாடலை பாடும் போது விசிகவின் வன்னி அரசு தாம் அமைச்சராக பதவி ஏற்கமாட்டேன் என்று அறிவிப்பாரா? தவெக அமைச்சர்கள், சிபிஎம் கட்சியும் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்குமா? என்று பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

விசிகவின் வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ன் ஷாஜஹான் ஆகியோர் இன்று மே 22-ந் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இருவருக்கும் ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.

ADVERTISEMENT

தமிழக பாஜக கேள்வி

இந்நிலையில் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் தமது எக்ஸ் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:

ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்பு

ADVERTISEMENT

முதலில் வந்தே மாதரம் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து- ஆதவ் அர்ஜுனா கொதிப்பு

அடுத்த முறை நடக்காது என்று பதிவு

ADVERTISEMENT

இரண்டாம் முறை 23 அமைச்சர் பதவி ஏற்பு- எப்போதும் போல் முதலில் வந்தே மாதரம்- அமைச்சர் ராஜ்மோகன் கொதிப்பு

நாளைக்கு மூன்றாம் முறை பதவி ஏற்பு

வன்னி அரசு பதவி ஏற்க இருக்கிறார்

வந்தே மாதரம் பாடினால்
பதவி ஏற்க மாட்டேன் என்று வன்னி அரசு மறுக்க முடியுமா?

தவெக அமைச்சர்கள், சிபிஎம் புறக்கணிக்க முடியுமா?

சவால் பதில் சொல்லுங்கள் @VanniArasu_VCK (வன்னி அரசு). இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share