அழுத்தம் இருக்கிறது.. அடங்கிப் போற ஆளா நான்? விஜய் ஆவேசம்
தமக்கு அழுத்தம் இருக்கிறது; ஆனால் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மாமல்லபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி தவெகவின் மாநில, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், நம்முடைய இந்த அரசியல் பயணத்துல மிக மிக மிக மிக முக்கியமான ஒரு காலகட்டத்துல இருக்கோம்.. இதை நான் இவ்வளவு அழுத்தமா ஏன் சொல்றேன்னா…
ஏதோ அழுத்தம் இருக்கும்னு நினைக்கிறீங்களோ? அழுத்தமா? நமக்கா? இந்த அழுத்தத்துக்கு எல்லாம் அடங்கிப் போற ஆளா இந்த ஆளு? இந்த மூஞ்சியப் பார்த்தா அப்படியா தெரியுது உங்களுக்கு? அதனால அப்படி எல்லாம் நடக்காது.. எதுவும் நம்மகிட்ட அப்படி எல்லாம் நடக்கவே நடக்காது ..
ஆனா அழுத்தம் இருக்குதுன்னா கேட்டீங்கண்ணா.. அழுத்தம் இருக்கு.. அது நான் இல்லைன்னு சொல்ல வரலை.. அது நமக்கு இல்லை.. மக்களுக்கு அழுத்தம் இருக்கு..
இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டை ஆண்டவங்களும் சரி.. அவங்க பாஜகவுக்கு அடிமையாகத்தான் இருந்திருக்காங்க.. அவங்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
இப்ப ஆண்டுகிட்டு இருக்கிற திமுக அரசாங்கமும் நமக்கு எதாவது செய்வாங்களான்னு பார்த்தா அவங்களை மாதிரியேதான்.. இன்னும் சொல்லப் போனா.. ஒரு படி மேல.. இன்னும் மோசம்..
அவங்களாச்சும் நேரடியா சரண்டராகி இருப்பாங்க.. இவங்க மறைமுகமாக சரண்டராகி இருக்காங்க.. அவ்வளவுதான் வித்தியாசம்.
அவங்களோட வேசம் கலைஞ்சிடங் கூடாதுன்னு கலர் கலரா அறிவிப்பு வெளியிடுறாங்க என்றார்.
