ADVERTISEMENT

அதெப்படி மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தலாம்? பாஜக கடும் கண்டனம்!

Published On:

| By Mathi

Madurai Adheenam

மத மோதலைத் தூண்டிவிடும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்திடம் போலீசார் இன்று ஜூலை 20-ந் தேதி விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Madurai Adheenam

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த (ஜூலை 20-ந் தேதி) வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்த திமுக அரசு.

ADVERTISEMENT

இந்த ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போது விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருகிறார்கள் தமிழ்நாடு காவல்துறையை வைத்து.

70 வயதைக் கடந்த போற்றுதலுக்குரிய மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் உடல்நலம் குன்றியுள்ள நிலையில் இரண்டு நாட்கள் முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று குணமடைந்து திரும்பியுள்ளார். அதுவும் இந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் கூட விசாரணை நடத்தத் தேடி வருவதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

இந்த அரசு ஆன்மீக விவகாரத்தில் செய்யும் அத்துமீறல்களையும், இந்து விரோத செயல்களையும் தட்டிக்கேட்கும் சமயப்பெரியவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏதாவதொரு மன அழுத்தத்தை இந்த அரசு கொடுத்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம். ஆகவே, இனியும் காவல்துறையின் அத்துமீறல்களை எல்லாம் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, காவல் துறையின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மதுரை ஆதீனத்தின் பக்கபலமாக அங்கே இருப்பார்கள். நாளை நாகூரில் நடைபெறவிருக்கும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவான போராட்டத்தை முடித்துக்கொண்டு நானும் அங்கே செல்லவிருக்கிறேன். ஞானசம்பந்தர் காலம் முதல் புகழோடும், கீர்த்தியோடும் விளங்கி வரும் மதுரை ஆதீனத்தின் மாண்பைக் காக்க என்றும் தமிழக பாஜக துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share