எஸ்.பி.வேலுமணி வழக்கு : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிய அனுமதி… நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்ன வார்த்தை!

By Kavi

|

Published on 12 Nov 2026, 5:06 PM

சென்னை கோவை மாநகராட்சிகளில் ஆணையர்களாக பணியாற்றிய ias அதிகாரிகள் மீதான குற்றவியல் வழக்கு விசாரணையை தொடர பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் 98 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. 

ADVERTISEMENT

இந்த புகாரின் பேரில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 

 இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். 

ADVERTISEMENT

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான கே எஸ் கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் இவ்வளவு தாமதமாகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  98 கோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்ற வழக்குகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறுவதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணம். 

ஏழைகளுக்கு எதிராக சட்டசக்கரங்கள் வேகமாக சுழல்கின்றன. ஆனால் செல்வாக்கு மிக்கவர்களுக்கு எதிராக அது நகர்வதே கிடையாது. 

இந்த வழக்கு நிலையை எட்டுவதற்கு நீதிமன்றம் மிகவும் கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel