கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலளிக்க முடியாமல் திணறினார். குறிப்பாக, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குறுஞ்செய்தி உண்மையா, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், “யாருடைய தனிப்பட்ட விஷயத்தையும் பேசுவதற்கு எனக்கு அதிகாரம் கிடையாது” என்று கூறினார்.
மேலும், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சமூக ஊடக வதந்திகளை அரசியலாக்குவதாகக் குற்றம்சாட்டிய அவர், செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, “திரும்பத் திரும்ப இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது” என்று கூறி வேறு கேள்விகளைக் கேட்குமாறு தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று (நவ.12) அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:
செய்தியாளர்கள்: சார்.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அவர்கள்…
அமைச்சர் நிர்மல்குமார்: இந்தப் பிரச்சனை வந்து திரும்பவும் திரும்பவும் நான் சொல்றேன். கொஞ்சம் பொறுமையா கேளுங்க. இல்லை, இதையும் நான் திரும்பச் சொல்றேன். இப்ப நீங்க மூன்று நாட்கள் தங்க வைக்கப்படுவாங்கன்னு ஒரு செய்தி போட்டீங்கல்ல. அதே மாதிரி திருமதி சகோதரி கனிமொழி அவர்கள் பதிவு செஞ்சிருந்தாங்க.
சோ, அதை வந்து எப்படி நாங்க போய் திரும்பத் திரும்ப டிஃபென்ட் பண்ணனும்னு நீங்க ஆசைப்படுறீங்க? சமூக ஊடகத்தில் பார்த்தேன், அதைப் பார்த்து நான் இது மாதிரி அஸ்யூம் பண்ணி ஒரு பதிவு செய்றேன்னாங்க.
அதை எவ்வளவு பேர் டெவலப் பண்ணி, நிறைய பத்திரிகையாளர்கள் இதை டெவலப் பண்ணி, இதுதான் அந்தக் குறுஞ்செய்தின்னு ஒரு பத்திரிகையாளரே போட்டிருக்காங்க.
இதை வந்து ஒவ்வொன்றையும், ஒரு சில அவங்களுடைய அனுமதி இல்லாம நம்ம எல்லாம் டிஃபென்ட் பண்ண முடியுமா? சொல்லுங்க.
நாளைக்கு சகோதரி கனிமொழி அவர்கிட்ட ஒன்னு கேக்குறேன். இதே மாதிரி நான் வந்து சமூக ஊடகத்துல பார்த்தேன், உங்களைப் பத்தி யாராவது பதிவு செய்தால் ஏற்றுக்கொள்வாரா?
இதெல்லாம் எவ்வளவு தவறான செய்தி. திருமதி கனிமொழி அவர்கள், சகோதரி கனிமொழி அவர்கள் இதைச் செய்யலாமா?
அவங்கதான் இதுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட். அவங்க இதை அரசியலாக்கணும்னு சொல்லிட்டு, அவங்கதான் இதுக்கு ஸ்டார்ட்டிங் பாயிண்ட். அவங்க சொன்னதில் உண்மை இல்லைன்னு சொன்னால் அவங்க என்ன செய்வாங்க? சொல்லுங்க. என்ன நடந்துச்சுன்னு அவங்களே போன் பண்ணி யார்கிட்ட வேணாலும் கேக்குறதுக்கான முழு சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குது. அது என்ன நடந்ததோ, என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, நீங்க ஒரு சில விஷயங்கள் சமூக ஊடகங்களில் பார்த்தேன்னு சொல்லி அவங்க பதிவு செய்தது கண்டிப்பாக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நேத்து எம்.எல்.ஏ. மூன்று நாட்கள் தங்க வைக்கப்படுவாங்கன்னு சொன்னீங்க.. இது எல்லாத்துக்கும் நம்ம ரெஸ்பான் பண்ணிட்டே இருக்க முடியுமா?
ஒவ்வொரு விஷயத்துல என்ன இருக்கோ அதை நாங்க பேசுறோம். நீங்க ரூமர்ஸ் எல்லாம் அடிப்படையில நாங்க வந்து பதில் சொல்லிட்டே இருக்கணும்னா, பதில் சொல்லிட்டு இருக்கறதுக்கு நாங்க ஒரு 10 ஸ்போக்ஸ் பர்சன் வச்சுதான் பேசனும்.
செய்தியாளர்கள்: கள்ளக்குறிச்சியில் நடந்தது என்னங்க?
அமைச்சர் நிர்மல்குமார்: இங்க பாருங்க, நான் வந்து யாருடைய தனிப்பட்ட விஷயத்தையும் நாங்க பேசுறதுக்கு நான் இல்லை. சரியா? அதை நாங்க பேசுறதுக்கும், அதை மென்ஷன் பண்ணிப் பேசுறதுக்கும் எனக்கு அந்த அதிகாரம் கிடையாது.
ஆனால் திருமதி கனிமொழி அவர்கள் பதிவு செய்து, அவர் அந்த மாதிரி இல்லைன்னு சொன்னா, நான் ஒரே ஒன்னு சொல்றேன். திருமதி கனிமொழி அவர்கள் பதிவு செய்தது அந்த மாதிரி இல்லை.
நான்தான் சொல்றேனே சிஸ்டர், கலைஞர் டிவி சிஸ்டர், நீங்க ஒரு வெர்ஷன் நான் சொல்றதைக் கேளுங்க. நான் அதையும் சொல்லிக்கிறேன்.
நான் சொல்றதைக் கேட்கச் சொல்றதுதான். நீங்க சொல்றதைக் கேட்டிருக்க முடியுமா? நான்தான் சொல்றேன்னு சொன்னேன். நான் வந்து சொன்னதை நீங்க கேட்டுக்கிட்டாதான் நான் அதைச் சொல்ல முடியும்.
நான் வந்து சொல்றேன். திருமதி கனிமொழி அவர்கள் சொன்ன மாதிரி எந்தச் செயலும் நடக்கவில்லை. அது தவறு. ரூமரை அவங்க வந்து அந்த மாதிரி சமூக ஊடகத்திலிருந்து பார்த்தேன்னு சொன்னது தவறு. அந்த மாதிரி நடக்கவில்லை. அது கண்டிக்கத்தக்கதுன்னு சொல்றோம்.
செய்தியாளர்கள்: துறையூரில் துணை சபாநாயகர் தாக்கியது பற்றி?
அமைச்சர் நிர்மல்குமார்: இதை வந்து இம்மீடியட்டா நாங்க எல்லாம் விசாரிச்சோம். அதுக்கு அடுத்த உடனே வீடியோ வந்தது.. திமுகவுடைய நிர்வாகிகள் எல்லாம் டேக் ஓவர் பண்ணி ஏதோ ஒரு வேலை பார்த்துட்டு இருக்காங்க. மாத்தி மாத்தி வீடியோ வந்துட்டு இருக்கு. இதுல நான் உங்களுக்குத் தெரியும் என்ன நடந்திருக்கும் லோக்கல்ல. இதைப் பத்தி நான் திரும்பத் திரும்பப் பேச வேண்டாம். வேற ஏதாவது கொஸ்டின்ஸ்?
செய்தியாளர்கள்: ஒருவர் மீது தாக்குதல் நடத்துறதுன்றது சட்ட ரீதியாகத் தவறுதானே சார்? அதுக்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கணும்ல சார்?
அமைச்சர் நிர்மல்குமார்: இல்லை, நாம உள்ள என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சிட்டு இருக்கோம். விசாரிச்ச பிறகு சொல்றோம். அதுல முன்னாடியும் அவர் நிறைய தவறுதலாக நிறைய பேசிக்கிட்டு இருக்காரு. அது சம்பந்தமான இதுவும் இருக்கு. நம்ம இதைத் திரும்பவும் விசாரிச்சு சொல்வோம். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.








