ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்:’என்கவுண்டர் செய்திருப்பேன்’ – ஜெயக்குமார் ஆவேசம்

By Pandeeswari Gurusamy

|

Published on 12 Nov 2026, 3:25 PM

dmk govt will be dismissed jayakumar

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் நான் அந்த பெண் கலெக்டராக இருந்திருந்தால் என்கவுண்டர் செய்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் கட்டிடக் கூட்ட அரங்கில் இன்று (நவம்பர் 12) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த வரைவு பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டார்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“தவெகவினருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தவெக ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் அடித்தட்டு மக்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண் ஆட்சியர் இருந்த இடத்திற்கு நான் சென்றிருந்தால் என்கவுண்டர் செய்திருப்பேன்; சுட்டுத் தள்ளியிருப்பேன். எம்.எல்.ஏ.வாக இருந்தால் என்ன, யாராக இருந்தால் என்ன? வீடு தேடி ஒருத்தன் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ‘வாங்க’ என்று சிவப்பு கம்பளம் போட்டா வரவேற்பீர்கள்? பாவம், கலெக்டருக்கு எவ்வளவு மனவேதனை இருந்திருக்கும்!” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel