சென்னையில் பதற்றம்: 12ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு!

By Pandeeswari Gurusamy

|

Published on 12 Nov 2026, 12:36 PM

சென்னை வானகரம் அருகே முன் விரோதம் காரணமாக 12ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் போரூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், இவரது நண்பரான 21 வயதுடைய ஷியாம் என்பவருக்கும் இடையே நேற்று இரவு இருசக்கர வாகனத்தின் சாவியைப் பிடுங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷியாம், முன்விரோதம் காரணமாக இன்று மாணவர் அபிஷேக்கை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அபிஷேக், உடனடியாக வானகரம் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்துப் தகவல் அளித்தார். ரத்தக் காயங்களுடன் இருந்த மாணவரை மீட்ட காவல்துறையினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வானகரம் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ஷியாமைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel