அன்பில் மகேஷ் ஜாமின் மனு : காவல்துறைக்கு அவகாசம்!

By Kavi

|

Published on 12 Nov 2026, 12:17 PM

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார் அன்பில் மகேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் ஜாமின் கேட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

ஆனால் இந்த வழக்கில் ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக கூறி அன்பில் மகேஷின் ஜாமின் மனுவை ஊழல் தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில் தனக்கு ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மேல்முறையீடு செய்தார். 

ADVERTISEMENT

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி வில்சன் முறையீடு செய்தார். 

இதை விசாரித்த நீதிபதி, இந்த மனு எண்ணிடப்பட்டால் நாளையே (நவம்பர் 12) விசாரிப்பதாக தெரிவித்திருந்தார். 

அதன்படி அன்பில் மகேஷ் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் நீரஜ் கிஷன் கவுல் மற்றும் பி. வில்சன் ஆகியோர் ஆஜராகி, ”மனுதாரர் கடுமையான மற்றும் நாள்பட்ட கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சரணடைந்துவிட்டதால், முன்பு முன்ஜாமின் மறுக்கப்பட்டபோது இருந்த சூழ்நிலைகள் தற்போது இல்லை” என்றும் கூறி ஜாமின் கோரினர்.

காவல்துறை தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமின் மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நவம்பர் 17, 2026 வரை அவகாசம் வழங்கி நீதிபதி லட்சுமிநாராயணன் உத்தரவு பிறப்பித்தார். அன்றைய தினம் ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel