“வாய் வேலை போதாது… ஸ்டிர்க்ட் ஆபிசர் செய்தது என்ன?” – முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

By Kavi

|

Published on 12 Nov 2026, 2:32 PM

சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் விஜய்  கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை “டேமேஜ் கண்ட்ரோல்” என விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு  தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு, தொகுதி பிரச்சனை குறித்து பேச சென்றவரை துணை சபாநாயகரும் துறையூர் தவெக எம்.எல்.ஏவுமான ரவி சங்கர் தாக்கியதாக வெளியான வீடியோ ஆகியவை தமிழக வெற்றிக் கழக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இதில், சர்ச்சையில் சிக்கிய இரு தவெக எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக இன்று (நவம்பர் 12) அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின்,  ””தவறு செய்தால் விடமாட்டேன்” என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் ‘கடும் எச்சரிக்கை’ விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?

ADVERTISEMENT

பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் ‘Strict officer’ செய்தது என்ன?

இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!

Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!” என்று விமர்சித்துள்ளார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel