கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

senthil balaji

கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

ADVERTISEMENT

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன், தவெக சார்பில் செந்தில் குமார், நாதக சார்பில் பேரறிவாளன் ஆகியோர் போட்டியிட்டனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் 59,724 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அவர் தவெக வேட்பாளர் செந்தில் குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் 31,689 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share