செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

Published On:

| By Selvam

senthil balaji medical report

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. senthil balaji medical report

கடந்த நவம்பர் 20-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி “செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் பெலா எம் திரிவேதி, சதிஷ் சந்திரா சர்மா ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

உடல்நலக்குறைவால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “செந்தில் பாலாஜிக்கு ரத்த பரிசோதனை, எக்கோ பரிசோதனை, வயிற்று வலிக்கான சோதனை, கழுத்து வலி, முதுகெலும்பு, எம்ஆர்ஐ, எம்ஆர்ஏ, எம்ஆர்சிபி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் அசாதாரண நிலை மற்றும் வீக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

எம்ஆர்சிபி சோதனையில் பித்தப்பை பாலிப்கள், பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவர் நாளடைவில் உணவு உட்கொள்ள முடியாது.

சிறைவாசத்தில் இருப்பதால் செந்தில் பாலாஜியின் உடல் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்க வேண்டும்.

உரிய மருந்துகளை அவர் எடுக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பு, கணைய சுழற்சி, ரத்தக்கசிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படக்கூடும். மேலும் செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிரச்சனைகள் உள்ளது.

அதற்கான சிகிச்சைகளை அளிக்கவில்லை என்றால் நாளடைவில் கோமா நிலைக்கு செல்ல நேரிடும். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் கால்சிய படிவு அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இரத்த கொதிப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகி மாரடைப்பு ஏற்படக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. senthil balaji medical report

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Bigg Boss 7 Day 53: வீட்டின் கேப்டனான நிக்சன்…பூர்ணிமா மோட்டிவேஷன் டாக்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஞானவேல் ராஜாவின் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டேன்: அமீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share