மாயாவின் செருப்பை எடுத்து பூர்ணிமா விளையாடுவதாகத் தொடங்கியது எபிசோட். Bigg Boss Season 7 Day 53
இந்த ‘கண்டெண்டில்’ அப்படி என்ன சுவாரஸ்யத்தை பிக் பாஸ் எடிட்டர் கண்டார் எனத் தெரியவில்லை. அதற்கடுத்து வேக்கப் சாங் ஒலித்து முடிக்க, விஷ்ணு மற்றும் நமது ’டைட்டில் வின்னர்’ சரவண விக்ரமிற்கு வீட்டில் அனைவருக்கும் ஒரு பட்டப் பெயர் வைக்கும் படி டாஸ்க் வழங்கப்பட்டது.
அதன்படி, மாயாவிற்கு ‘வைக்கப்போர்’ என பெயர் வைத்தார். வைக்கப்போரை பற்ற வைத்தால் பக்கத்தில் உள்ள குடிசைகளையும் சேர்த்து எரித்து விடும். அது போல தான் மாயாவும் என விளக்கினார். விசித்ராவிற்கு ’தண்ணீர் லாரி’என்கிற பெயரும், தினேஷுக்கு ’இம்சை அரசன்’ என்கிற பெயரும், கூல் சுரேஷுக்கு ‘பதனி பதனி’ என்கிற பெயரும், அர்ச்சனாவுக்கு ‘தொட்டா சிணுங்கி’ என்கிற பெயரும் வைக்கப்பட்டது. இதில் தனக்கு வைக்கப்பட்ட ‘தொட்டா சிணுங்கி’ என்கிற பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை என விஷ்ணுவிடம் வாதிட்டார் அர்ச்சனா.
‘என்ன எல்லாரும் அழுதேன்னு மட்டுமே சொல்றீங்க. நான் இந்த வீட்ல எதுவுமே பண்லயா..?’ என அர்ச்சனா கேட்டதில் நியாயம் இருந்தாலும், ஒரு பட்டப் பெயர் டாஸ்கிற்கு இவ்வளவு பெரிய வாதம் அவசியமற்றது என்றே தோன்றியது.
இந்த விவாதத்திற்கு நடுவில் வந்த பூர்ணிமா ‘இப்படி நீங்க உடனே கோபப்பட்டு வரீங்கள்ல.., இதுக்கு தான் அந்த பட்டப் பெயர்’ என சொன்னதும், அந்த பாயிண்டை கப் என பிடித்துக் கொண்ட விஷ்ணு, ’நான் அப்படி தான் சொன்னேன். தப்பா சொல்லிருந்தா சாரி’என கீழே இறங்கினார். வழக்கமாக எந்த வாதத்திலும் எதிர் நபரிடம் இறங்கி பேச மாட்டார் விஷ்ணு. ஆனால், அர்ச்சனா விஷயத்தில் அடக்கி வாசித்ததற்கு காரணம், அவருக்கு வார இறுதியில் கிடைக்கும் கைதட்டல்கள் காரணமாக இருக்கலாம்.
இதற்கு இடையில் மறுபக்கம் ரவீனா – நிக்சன் இந்த விவகாரம் குறித்து பேசிக்கொண்டனர். ‘இதை ஏன் இவ்வளவு பிரச்சனை ஆக்குறாங்க..? வீட்டுக்கு வந்தப்போ 15 பேரும் என்ன வரவேற்கலன்னு சொன்னாங்க. அடுத்து 7 பேர் டார்கெட் பண்ணாங்கன்னு சொன்னாங்க. கமல் சார் கிட்ட அது மூணாச்சு’ என நிக்சன் சொன்னார். அதைத் தொடர்ந்து ரவீனாவை தனியாக அழைத்து வந்த மணி, ‘நீ ஏன் நிக்சன் கூட இப்படி பேசுற. அவன் கேம் ஆடுறது உனக்கு தெரியலையா..? இது எனக்கு சுத்தமா பிடிக்கல’ என கோபித்துக் கொண்டார்.
இதையடுத்து, வீட்டின் அடுத்த வார கேப்டன் தேர்ந்தெடுக்கப்படும் கேப்டன்சி டாஸ்கை விளையாட மூன்று பேரை வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்க, அனைவரும் சேர்ந்து நிக்சன், விஷ்ணு, ஜோவிகா ஆகியோரை தேர்ந்தெடுத்தனர்.
பாதியில் விடப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த பூகம்ப கதையை ஹவுஸ்மேட்ஸ் சொல்லும் டாஸ்க் இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதில் தன்னுடைய பூகம்ப கதையை மிகவும் மோட்டிவேசனாக சொன்னார் பூர்ணிமா. ஏறத்தாழ ஒரு ‘டெட் டாக்(Ted talk)’ பேச்சை கேட்ட ஒரு உணர்ச்சி அவரது பேச்சில் கிடைத்தது. இதோடு இந்த டாஸ்க் நிறைவு பெற, இந்த டாஸ்கில் சிறப்பான கதையாக பிராவோவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கோல்டன் ஸ்டார் வழங்கப்பட்டது.
ஆனால், 24/7 லைவ் எபிசோடில் ‘டைட்டில் வின்னர்’ சரவண விக்ரம் சொன்ன கதை, அதற்கு கூல் சுரேஷ் – நிக்சன் சிரித்ததை மாயா கோபத்துடன் கண்டித்தது போன்ற கண்டெண்ட்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், நமக்கு மட்டும் அதுபோன்ற கண்டெண்ட்கள் ஒளிபரப்பாகவில்லை. ’என்ன பிக் பாஸ் டீம்…., எல்லாரும் என் வாத்தியார பல்லு புடுங்கி பார்க்குறீங்களா..?’ என ’சார்பட்டா பரம்பரை’ ஆர்யா போல் ‘டைட்டில் வின்னர்’ரின் ஆர்மிக்கள் கேட்க நேரிடும் என்பதை விஜய் டிவி உணர்ந்திட வேண்டும்.
இதைத்தொடர்ந்து நடந்த கேப்டன்சி டாஸ்கில் மீண்டும் ஒரு முறை ஜோவிகா தோல்வியை தழுவ, அடுத்த வார கேப்டனானார் நிக்சன். ‘CAPTAIN’ என்கிற வார்த்தையை சரியாக சேர்க்க வேண்டும் என்பதே டாஸ்க் . ஆனால் இந்த வார்த்தையில் ‘H’ உள்ளது என நினைத்து முதலே ‘H’ஐ தூக்கி ஓடினார் ஜோவிகா. அதனால் தான் இத்தகைய சுலபமான டாஸ்கிலும் தோற்றுள்ளார்.
சரி அவரைப் போல் நமக்கு கார் டயரை மாட்ட தெரியுமா என்ன..? ஆனால் அதுகுறித்து அவர் அழுத காட்சியை பார்க்க முடிந்தது. பாவம் கொஞ்சம் மெடிக்கல் ரூம் அவருக்கும் தேவைப்பட்டிருக்கலாம். அல்லது வெளியில் இருந்து டாஸ்கை எப்படி ஆட வேண்டும் என்கிற துருப்பு கொண்ட டீசர்ட் வந்தால் நன்றாக இருக்கும். வரவும் கூடலாம்.
இதையடுத்து ஜி ஸ்கொயரின் புரொமோசன் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அந்த டாஸ்கில் ஜட்ஜான மணிக்கும் பெர்ஃபாமரான மாயாவிற்கும் இடையே சிறிது மோதல் நிகழ்ந்து பின் எபிசோடின் இறுதியில் சமாதானம் ஆகினர்.
– ஷா Bigg Boss Season 7 Day 53
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்
2 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்!
ஞானவேல் ராஜாவின் சூழ்ச்சிக்கு பலியாக மாட்டேன்: அமீர்