top ten news today in Tamil November 25 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

ராஜஸ்தான் தேர்தல்! top ten news today in Tamil November 25 2023

ராஜஸ்தானில் உள்ள 199 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று (நவம்பர் 25) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

உள்நாட்டு விமானங்கள் ஆய்வு!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல் நிறுவனத்தில் உள்நாட்டு போர் விமானமான தேஜாஸ் ஜெட் மற்றும் உற்பத்தி பிரிவை ஆய்வு செய்கிறார்.

நிறுவனங்களின் நாயகர் கலைஞர் கருத்தரங்கம்!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெறும் நிறுவனங்களின் நாயகர் கலைஞர் கருத்தரங்கை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைக்கிறார்.

என் மண் என் மக்கள் நடைபயணம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் 4-வது கட்டம் முசிறியில் இன்று துவங்குகிறது.

கனமழை விடுமுறை!

கனமழை காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் மேற்கொள்ள இன்று தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 553-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்ச்சல் சிறப்பு முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று சுகாதாரத்துறை சார்பில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கென்யா, தான்சானியா மோதல்!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் கென்யா, தான்சானியா அணிகள் இன்று மோதுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்

சென்னை மெட்ரோவில் ரூ.5-க்கு பயணம் செய்யலாம்!

மனுசனா… தெய்வமா… குழப்பமா இருக்கே?: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: மாநாட்டுக்கு ஒத்துழைக்காத அமைச்சர்கள்… மாசெக்கள் கூட்டத்தில் உதயநிதி – காத்திருக்கும் சம்பவம்!

top ten news today in Tamil November 25 2023

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *