ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய எஸ்பிஐ!

By christopher

|

Published on 27 Dec 2023, 4:40 PM

SBI raised fixed deposit interest rate

நிரந்தர வைப்புத்தொகைக்கான(Fixed Deposit) வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ உயர்த்தியுள்ள நிலையில் இன்று (டிசம்பர் 27) முதல் அமலுக்கு வந்துள்ளது. SBI raised fixed deposit interest rate

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக தொடர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையிலும் ரூ. 2 கோடிக்கு குறைவான நிரந்தர வைப்புத் தொகைக்கான (எஃப்.டி) வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ).  இந்த வட்டி விகிதம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பொதுமக்களை பொறுத்தவரை 1 வருடத்திற்கும் குறைவான நிரந்தர வைப்பு தொகையின் வட்டி விகிதம் 0.25% முதல் 0.50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வட்டி விகிதம் 0.25% அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதேவேளையில் 1 முதல் 3 ஆண்டுகள் மற்றும் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்தர வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை.

SBI உயர்த்திய FD விகிதங்களை இங்கே பார்க்கவும்; (முந்தைய விகிதம் அடைப்புக்குறிப்புகள் உள்ளது)

ADVERTISEMENT

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 3.50% (3%) ????

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 4.75% (4.50%) ????

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 5.75% (5.25%) ????

211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது 6% (5.75%) ????

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை 6.80% (6.80%)

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.00% (7.00%)

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.75% (6.50%) ????

5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை 6.50% ( 6.50%)

மூத்த குடிமக்களுக்கான SBI FD விகிதங்கள்: (முந்தைய விகிதம் அடைப்புக்குறிப்புகள் உள்ளது)

இந்த வைப்புத்தொகையில் மூத்த குடிமக்களுக்கும் 0.25% முதல் 0.50% வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 4% (3.50%) ????

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 5.25% (5%) ????

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.25%  (5.75%) ????

211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது 6.50% (6.25%) ????

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக 7.30% (7.30%)

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.50% (7.50%)

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 7.25% (7) ????

5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை 7.50% (7.50%)

5வது வங்கி!

இதன் மூலம், 2023 டிசம்பரில் கால வைப்புகளுக்கான (Term Deposit) வட்டி விகிதங்களை உயர்த்தும் ஐந்தாவது வங்கியாக எஸ்பிஐ ஆனது.

முன்னதாக பேங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டிசிபி வங்கி ஆகியவையும் இந்த மாதம் தங்கள் கால வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’ரூ.40,000 கோடி கொரோனா ஊழல்’ : எடியூரப்பாவை அம்பலப்படுத்திய பாஜக எம்எல்ஏ!

ஓபிஎஸ்தான் சிறைக்கு செல்வார்: ஈபிஎஸ் பேட்டி!

SBI raised fixed deposit interest rate

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel