புதுவையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (டிசம்பர் 27) உயிரிழந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தியது. இதனையடுத்து ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும் கொரோனா பாதிப்பு முழுவதுமாக ஓயவில்லை. சமீபத்தில் ஜே.என்.1 என்ற கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இந்த ஜே.என்.1 வைரஸ் ஒமிக்ரான் வகையை சேர்ந்தது என்றும், இதனால் பாதிப்பு அதிகம் இருக்காது எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குளிர் காலம் என்பதால் சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேர்த்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் 4 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த 55 வயது நபர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தற்போது புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஓபிஎஸ்தான் சிறைக்கு செல்வார்: ஈபிஎஸ் பேட்டி!
’ரூ.40,000 கோடி கொரோனா ஊழல்’ : எடியூரப்பாவை அம்பலப்படுத்திய பாஜக எம்எல்ஏ!